
6 மாதத்தில் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டிய CPC
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்தவும் பல திட்டங்களைத் தொடங்கதற்காகவும் இந்த இலாபம் பயன்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக அதிகாரி மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
எரிபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாக அதிகாரி மயூர நெத்திகுமார தெரிவித்தார்.