
நாட்டில் சடுதியாக அதிகரித்த கொப்பரை விலை
கண்டியில் உள்ள சிறி தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவிற்கு தேவையான கொப்பரையை வாங்குவதில் அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டி எசல பெரஹெராவிற்கு இருபது மெட்ரிக் டன் கொப்பரை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெரஹெராவின் போது, ஒரு கிலோ கொப்பரை ரூ. 250-350 வரை வாங்கப்பட்டது. இருப்பினும், இந்த முறை ஒரு கிலோ கொப்பரை ரூ. 500-600 வரையான விலையில் வாங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 20 டன் கொப்பரையில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் இலங்கை இராணுவம் வழங்கினாலும், இந்த முறையும் அந்த அளவு குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் சில குழுக்கள் சலுகை விலையில் கொப்பரை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தாலும், இந்த முறை நிலைமை மாறிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.