
கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட இளைஞன் ; விசாரணையில் வெளியான பகீர் காரணம்
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதுடன், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களும் பலத்த காயங்களுடன் லுனாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அங்குலான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இந்தக் கொலை நடந்திருப்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையைச் செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.