தேவாலயத்திற்குள் அருகில் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் ; தமிழர் பகுதியில் சம்பவம்

தேவாலயத்திற்குள் அருகில் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு கல்லடி கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்லடி பிரதான வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கருகாமையில் இன்று 63 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்திற்குள் அருகில் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் ; தமிழர் பகுதியில் சம்பவம் | Man Found Dead Near Temple Incident In Tamil Area

கிரான்குளம் பகுதியைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வீட்டில் இருந்து ஆரையம்பதி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்திருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.