
கண்டி எசல பெரஹராவுடன் தொடர்புடைய மூன்று கைதுகள்
கண்டி எசல பெரஹெரா தொடங்குவதற்கு முன்னர் 100 கிராம் ஹெராயினுடன் ஒரு யானைப் பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இருந்து யானையுடன் யானைப் பாகன் கண்டி எசல பெரஹராவுக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் ஹெரோயின் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக, குறித்த யானை பெரஹெராவில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில், பாதுகாப்புப் படையினரின் அம்பியுலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் மூன்று டி56 ரவைகளுடன் கைது செய்யப்பட்டார். கண்டியின் சோதனைச் சாவடியில் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை மற்றொரு சம்பவத்தில், கொழும்பைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவர் பெரஹெரா பகுதிக்குள் நுழைய முயன்றபோது இரண்டு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.