பாடசாலை மாணவனால் விபத்து; பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டு புதரில் வீசி சென்ற கொடூரம்!

பாடசாலை மாணவனால் விபத்து; பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டு புதரில் வீசி சென்ற கொடூரம்!

இலங்கையின் காலி ஹினிடும்கொட கனிஷ்டக் கல்லூரிக்கு அருகில் நடந்த ஒரு கோரமான விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு, 40 வயதுடைய பெண் ஒருவர் காலை இழந்த சம்பவம் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் பெண்னிணி ஒருகால் துண்டிக்கப்பட்ட  நிலையில், மாணவர் பெண்ணின் காலை புதிரில் வீசி சென்ற சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில், 

பாடசாலை மாணவனால் விபத்து; பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டு புதரில் வீசி சென்ற கொடூரம்! | Accident Schoolboy Female Leg Amputation

சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பாடசாலைக்கு அருகில் வீதியோரத்தில் காத்திருந்தார்.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் குறித்த பெண் மீது மோதியுள்ளது. இதன்போது பெண்ணின் முழங்காலுக்குக் கீழ் இருந்த ஒரு கால் துண்டாகி, உடல் பகுதியிலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

பாடசாலை மாணவனால் விபத்து; பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டு புதரில் வீசி சென்ற கொடூரம்! | Accident Schoolboy Female Leg Amputation

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அந்த மாணவனின் வீட்டிற்குச் சென்று தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தின் மிகவும் திகிலூட்டும் அம்சம் என்னவென்றால், விபத்தின் போது துண்டிக்கப்பட்ட பெண்ணின் கால், மோட்டார் சைக்கிளில் சிக்கிக் கொண்டது.

விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அந்தச் சிறுவன், பின்னர் துண்டிக்கப்பட்ட காலை அருகிலிருந்த ஒரு புதரில் வீசிவிட்டுச் சென்றுள்ளான். மாணவன் அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்களாலேயே பெண்ணின் துண்டிக்கப்பட்ட கால் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் கலை இழந்த பெண் பெண் தற்போது காலிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய 15 வயதுச் சிறுவன் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.