கனடாவில் காத்திருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் ; யாழ்.வந்த நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் காத்திருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் ; யாழ்.வந்த நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கனடாவில் காத்திருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் ; யாழ்.வந்த நபர் சடலமாக மீட்பு! | Body Of Person Arrived In Jaffna Canada Recovered

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும், மனைவியும் கனடாவில் உள்ளனர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.