யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் ஒருவர் பலி

யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது-23) என்பவராவார்.

யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் ஒருவர் பலி | Young Family Woman Dies Of Encephalitis In Jaffna

புது வருடத்தன்று காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை (19) மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டிருந்த நிலையில் திங்கட்கிழமை (21) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.