யாழில் திடீரென பலியான காதலன் ; காதலி செய்த விபரீத செயலால் துயரில் தவிக்கும் குடும்பம்

யாழில் திடீரென பலியான காதலன் ; காதலி செய்த விபரீத செயலால் துயரில் தவிக்கும் குடும்பம்

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

யாழில் திடீரென பலியான காதலன் ; காதலி செய்த விபரீத செயலால் துயரில் தவிக்கும் குடும்பம் | Boyfriend Drowns In Jaffna Girlfriend S Decision

குளத்தில் தாமரைப்பூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இளைஞன் குளத்தில் தாமரைப்பூ பறித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் உயிரிழந்துள்ளார்.

 அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.