யாழ் விடுதியொன்றில் இரு இளைஞர்களின் மோசமான செயல்

யாழ் விடுதியொன்றில் இரு இளைஞர்களின் மோசமான செயல்

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களை , எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

யாழ் விடுதியொன்றில் இரு இளைஞர்களின் மோசமான செயல் | Two Youths Commit A Heinous Act At A Jaffna Hotel

அந்த கிடைத்த அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 20 மற்றும் 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை கைது செய்தனர்.

கைதான இருவரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (16) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது இரு இளைஞர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.