தந்தையின் கொடூர செயல் ; காதலனுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி

தந்தையின் கொடூர செயல் ; காதலனுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்து விட்டு குளியறையில் வைத்து பூட்டி நாடகமாடிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் சமாஸ்திபூரில் வசித்து வருபவர் முகேஷ் சிங். இவரது மகள்  25 வயதான சாக்ஷியையே இவ்வாறு கொலை செய்துள்ளார்.

 வீட்டருகே வசித்து வந்த வேறு சாதியை சேர்ந்த வாலிபரும், சாக்ஷியும் ஒன்றாக கல்லூரியில் படித்துள்ளனர். அப்போதில் இருந்து இருவரும் பழகி வந்ததாக தெரிகிறது.

கடந்த மாதம் 4ஆம் திகதி சாக்ஷி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனுடன் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தையின் கொடூர செயல் ; காதலனுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி | Father Kills Daughter Went Boyfriend Hide Bathroom

தனது மகள் டெல்லியில் இருப்பதை அறிந்த முகேஷ் சிங், அங்கு சென்று, தனது மகள் மனம் மாறும் வகையில் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டுக்கு வந்ததும் கோபப்பட்டு பெற்ற மகள் என்று கூட பாராமல் கடந்த 7ஆம் திகதி கொலை செய்து மகள் உடலை குளியலறையில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.

பின்னர் ஏதும் தெரியாதது போல் இருந்துள்ளார். அவரது மனைவி மகள் எங்கே? என்று கேட்க, மீண்டும் அந்த பையனுடன் ஓடியதாக கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவிக்கு சந்தேகம் வர, பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில் குளியலறையில் இருந்து துர்நாற்றம் வீச திறந்து பார்க்கும்போது சாக்ஷி உடல் இருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தியபோது, முகேஷ் சிங் தனது மகளை கொலை செய்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், தன் மகளை கொலை செய்தபின், அந்த வாலிபர் கொலை செய்ய சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கே இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பியுள்ளார். இல்லையென்றால் அந்த வாலிபரையும் கொலை செய்திருப்பார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.