
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை : வெளியானது உண்மை காரணம்
கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை நிபுணர் குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakodi) தெரிவித்திருந்தார்.
இதனால் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும் இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அரச தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்தது தான் மின் தடைக்கு வழிவகுத்துள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
மின் தடைக்கான அறிக்கையை சமர்ப்பித்து அந்த குழு இதனை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த குழுவின் முழு அறிக்கையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.