யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

4ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி இவர் பூப்புனித நீராட்டு விழாவுக்கு செல்வதற்காக வீதியை கடந்துள்ளார்.

இதன்போது அதிவேகமாக வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்மீது மோதியதில் முதியவர் அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு | Man Dies In Motorcycle Accident In Jaffna

பின்னர் வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.