யாழில் கழிவு வாய்க்காலில் மீட்க்கப்பட்ட சடலம்; விசாரணைகள் ஆரம்பம்

யாழில் கழிவு வாய்க்காலில் மீட்க்கப்பட்ட சடலம்; விசாரணைகள் ஆரம்பம்

யாழ். பருத்தித்துறை பிரதான வீதி கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வங்கிக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்காலில் நேற்று (26) நண்பகல் சடலம் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கழிவு வாய்க்காலில் மீட்க்கப்பட்ட சடலம்; விசாரணைகள் ஆரம்பம் | Dead Body Found In Sewage Drain In Jaffna

சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி  சடலத்தை பார்வையிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.