யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் கைது செய்ய  நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்; 20 பேரை தேடும் பொலிஸார் | A Young Man Was Stripped Naked Attacked In Jaffna

இதன்போது தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்து யாழ் , நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்; 20 பேரை தேடும் பொலிஸார் | A Young Man Was Stripped Naked Attacked In Jaffna

அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அவற்றின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேர் வரையில் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.