தமிழர் பகுதியில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

தமிழர் பகுதியில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும் மற்றும் 12 லட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவல் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (21) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  குறித்த பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்னர்.

இதையடுத்து, குறித்த பெண் தனது காதலனுடன் இருக்கும் காணெளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.

தமிழர் பகுதியில் பாலியல் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Two Police From Palaly Police Station Arrestedஇந்தநிலையில், காவல்துறையினரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய அந்தப் பெண் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினர், மேற்படி இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இன்று (22) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.