வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

வாகன இறக்குமதி சரியான முறையில் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath ) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று (15.10.2024) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக பெரிய கோரிக்கை உள்ளது.

அதற்கான அமைச்சரவை முடிவு ஏற்கனவே உள்ளது. ஆனால் நாங்கள் வாகனங்களை திடீரென இறக்குமதி செய்யவில்லை.

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் | Vehicle Import Ban Will Lift In Stages

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வரிச்சலுகை தரும் வாகனங்களை கொண்டு வரவில்லை.

ஆனால், வாகனங்களின் இறக்குமதி சரியான முறைக்கு உட்பட்டு, நமது டாலர் தொகை இழுபறியாகாமல் இருக்க வேண்டும், இதனால் நமக்கு மீண்டும் டாலர் நெருக்கடி ஏற்படாது.

மேலும், வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்ய சில வாய்ப்புக்களையும் வழங்குவோம் என்று நம்புகிறோம் என அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.