இசை நிகழ்ச்சியில் பயங்கரம்... மனைவியுடன் நடனமாடிய இளைஞன்! கணவனின் கொடூர செயல்

இசை நிகழ்ச்சியில் பயங்கரம்... மனைவியுடன் நடனமாடிய இளைஞன்! கணவனின் கொடூர செயல்

களுத்துறை பகுதியில் இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடங்கொட, ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான மெனுர நிம்தர வணிகசேகர என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.இசை நிகழ்ச்சியில் பயங்கரம்... மனைவியுடன் நடனமாடிய இளைஞன்! கணவனின் கொடூர செயல் | Husband Kill Youth Danced With His Wife Sri Lankaசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலையை செய்த சந்தேகநபர் மனைவியை விட்டு சில நாட்களுக்கு முன்பு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் களுத்துறை, கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட குறித்த நபரின் மனைவி வந்ததாகவும், அங்கு அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞர் ஒருவருடன் நடனமாடியதாகவும் தெரியவருகின்றது.

இசை நிகழ்ச்சியில் பயங்கரம்... மனைவியுடன் நடனமாடிய இளைஞன்! கணவனின் கொடூர செயல் | Husband Kill Youth Danced With His Wife Sri Lanka

இதை கண்ட சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞனின் கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.