சீன எக்ஸிம் வங்கி தலைவருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

சீன எக்ஸிம் வங்கி தலைவருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி (எக்ஸிம்)வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் (Wu Fulin) கடந்த செவ்வாய்க்கிழமை (10) கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

மெய்நிகர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் தற்போதைய கடன் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.