
இங்கிலாந்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலைசெய்த நபருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் தனது மனைவியை பல தடவைகள் சரமாரியாக கத்தியால் குத்தி கொலைசெய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
நேற்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், இந்திய வம்சாவளியான 28 வயதுடைய காசிஷ் அகர்வால் என்ற சந்தேகநபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் 3ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தினத்தன்று, கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராறில் மனைவியை சந்தேகநபர் தாக்கியுள்ளார். பின்னர்
உயிரிழந்த மனைவியின் உடலை தனது மகிழுந்தில் பல மைல் தூரம் எடுத்துச்சென்று பின்னர் தெருவில் விட்டுச் சென்றுள்ளார்.
மறுநாள் கழுத்து, தோள்பட்டை, மார்பு மற்றும் கை என உடலின் பல இடங்களில் குத்தப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று கிடப்பதை பொதுமக்கள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளைகளில் அந்த சடலம் கீதிகா கோயல் என்றழைக்கப்பட்ட சந்தேகநபரின் மனைவியென உறுதிப்படுத்தப்பட்டதுடன் சந்தேகநபரை கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உண்மை வௌிவந்ததையடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனினும் தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தேகநபருக்கு பிணையில் வௌிவருவதானாலும் குறைந்தபட்சம் 20 வருடங்களும் ஆறு மாதங்களுக்கும் மேல் செல்லும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.