ஐ.தே கட்சியின் புதிய உப தலைவராக ருவன் விஜயவர்தன..!
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உப தலைவராக ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதோடு பிரதி தலைவராக அகில விராச் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு, ஏ எஸ் எம் மிஷ்பாய் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.