முள்ளியவளையில் இன்று இரவு இடம்பெற்ற துயரம் - பரிதாபகரமாக பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

முள்ளியவளையில் இன்று இரவு இடம்பெற்ற துயரம் - பரிதாபகரமாக பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர்

முல்லைத்தீவு முள்ளியவளை ஆலடி பகுதியில் இன்று (25) இரவு 8 மணியளவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

முள்ளியவளை நகர் பகுதியில் இருந்து முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தர் முள்ளியவளை ஆலடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானவேளை மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த நபர் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்