
சுகாதார அமைச்சின் முக்கிய தீர்மானம்
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் விசேட தேவையுடைய 39 பேருக்கு சுகாதார அபிவிருத்தி நிதியத்தின் பணத்தை பயன்படுத்தி சிகிச்சையளிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தெளிவுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலில் காயமடைந்த சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட பலர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சத்திர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வைத்திய உதவிகளையும் மேற்கொள்ளத் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு சுகாதார அமைச்சர், உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
2019 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இன்னும் 139 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.