நாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,379 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (புதன்கிழமை) புதிதாக மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஓமனில் இருந்து நாடுதிரும்பிய இலங்கையர்கள் 03 பேரும் ஓமானில் இருந்து வந்த ஒரு இந்திய கடல் வணிகர் ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் எவரும் குணமடையவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 136 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 46 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.