தந்தை மற்றும் மகளின் உயிரை பறித்த கோர விபத்து..!
அநுராதபுரம்-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என கூறப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்றும் மகிழூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணகைளை முன்னெடுத்துள்ளனர்.