கொரோனா கட்டுப்பாடு -உலகளவில் இரண்டாமிடத்தில் ஸ்ரீலங்கா
உலகளவில் கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளில் ஸ்ரீலங்கா இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.
சீனாவின் ஜிகாய் (YICAI) ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த சமீபத்திய உலகளாவிய ஆய்விலேயே ஸ்ரீலங்கா 2 வது இடத்தில் உள்ளது.
YICAI ஆராய்ச்சி நிறுவனம் ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான யிகாய் மீடியா குழுமத்தின் ஒரு பிரிவாகும்
"ஸ்ரீலங்கா எந்தவொரு சார்பும் இல்லாமல் உலகளாவிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதியானது." என கொழும்பில் உள்ள சீன தூதரகம் டுவீட் செய்துள்ளது.
இந்த நிரல்படுத்தலில் சீனா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.