கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாண பணிகள் ஆரம்பம்..!
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாண பணிகள் இன்று ஆரம்பமாகின.
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
36.54 கிலோ மீற்றர் நீளத்தில் இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த பகுதியின் நிர்மாண பணிகள் கடந்த ஐந்து வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.