எம்.ஜி.ஆருக்கு பிறகு சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பெற்ற விஜய்

எம்.ஜி.ஆருக்கு பிறகு சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பெற்ற விஜய்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

எம்ஜிஆர் 1977-ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட்டு 33.52 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நடப்பு தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 34.75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.