இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி

இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி

இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

இன்று(03) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அஜித் விஜேமன்ன, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், சபரகமுவ மாகாணத்திலும் இன்று இரவும் நாளை காலையும் மழை தொடரும் என்று கூறினார்.

 நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும் 

இருப்பினும், நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஓகஸ்ட் 06 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மழை

இதேவேளை,  ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி | Rainy Weather To Ease By Tomorrow Afternoon

 

இதன் விளைவாக, ஓகஸ்ட் 06-ஆம் திகதிக்குப் பிறகு மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.