தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி
முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் Accountability, Apology இருக்கிறதா?
காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தொடரும் காவல் மரணங்கள் . முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.