யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு!

யாழில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் இருந்த கட்டிடத்திலிருந்தே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆழியவளைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மருதங்கேணி காவல்துறையினர்

இதனடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் 14.5 கிலோகிராம் கஞ்சா பொதிகளைக் கைப்பற்றி, மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு! | 14 5Kg Ganja Seized From Ruined House In Jaffna

இருப்பினும், குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.