யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் வட்டமிட்ட ட்ரோன்! ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் வட்டமிட்ட ட்ரோன்! ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ட்ரோன் ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ட்ரோனை அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

 

கண்காணிக்க அனுமதி 

இதேநேரம், இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு சிறைப் பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் வட்டமிட்ட ட்ரோன்! ஒருவர் கைது | Man Arrested For Flying Drone Over Jaffna Prison

இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ட்ரோன் அது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.