ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்

ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்

ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்து உள்ளது. 

இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் வெளியிட்ட செய்தியில், ஹேர்முஸ் நீரிணையை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது. 

ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளது. 

இதன்படி, ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஈரானுக்கு எதிராக நேற்று முன்தினம் 3-வது சுற்று தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது. 

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது. 

இதன்படி, ஈரானின் 140 இராணுவ இலக்குகள் மீது துல்லிய தாக்குதல் நடந்தது. நிலம் மற்றும் கடல்வழி போர் விமானம், டிரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் உதவியுடன் இந்த தாக்குதல் நடந்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. 

இந்த சூழலில், நேற்று மற்றொரு தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது. அதற்கேற்ப தாக்குதல் நடத்தியவர்களை நேற்றிரவு நாங்கள் விரட்டியடித்து விட்டோம் என்று ட்ரம்ப் கூறினார். 

ஈரான் நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. . 

குறித்த நீரிணை வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று தெரிவித்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 

இதனால், ஆத்திரமுற்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பை வெளியிட்டார். 

இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்பட்ட சூழலில், மேற்காசிய பகுதியில் தன்னுடைய தலையீட்டை நிறுத்தி கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை பகுதி மூடப்படுகிறது என்று ஈரான் திடீரென்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.