நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? - முதலமைச்சர் விஜய்

நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? - முதலமைச்சர் விஜய்

எனக்கு காயம், வலியை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் சரியான பதிலடி மக்கள் கொடுத்தனர். காலத்திற்கும் திமுக எழ முடியாத அளவிற்கு மக்கள் நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும்.

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்  பேசியதாவது:-

* ஸ்டாலின் சார் நம்ம மேல் அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம்?

* நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்.

* யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என கூறுங்கள், நான் உங்களுடன் உள்ளேன். லஞ்சம் கொடுக்காதீர்கள். 

* எனக்கு காயம், வலியை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் சரியான பதிலடி மக்கள் கொடுத்தனர். காலத்திற்கும் திமுக எழ முடியாத அளவிற்கு மக்கள் நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும்.

* மக்கள் நம் பக்கம் இருக்கும் போது நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? நாங்கள் வாஷிங் மெஷினா? தி.மு.க. தான் வெண்டிங் மெஷின். 

* அரசியல் வியாபாரத்துக்கான வெண்டிங் மிஷன் திமுக, ஓட்டுக்கு காசு கொடுக்கம் கலாச்சாரத்தை த.வெ.க. உடைத்தது. 

* வென்று முதலமைச்சர் ஆன பிறகும், நான் கரூர் செல்லக்கூடாது எனச்சொல்வதில் என்ன நியாயம்?

* தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். 

* மக்களே, வரும் இடைத்தேர்தலில் தீயசக்தி திமுகவை வைத்து வெளுத்து விடுங்கள். 

* மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை தமிழகம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது என்றார்.