கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் விஜயிடம் கொடுங்கள்

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் விஜயிடம் கொடுங்கள்

இலங்கைத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் என்று கூறிய நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுத் தீவுடன் யாழ்ப்பாணத்தைத் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான சி. ஜோசப் விஜய்யின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு நாடாளுமன்றில் வாழ்த்து தெரிவித்து பேசும்போதே யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

விஜய் கச்சத்தீவைக் கோரியபோது, ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனை மறுத்துவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிய அர்ச்சுனா ராமநாதன், கச்சத்தீவுடன் யாழ்ப்பாணமும் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும், வடக்குத் தீவுகளில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை குறித்துக் கவலைகளையும் இந்த உரையில் வெளிப்படுத்தினார்.

அண்மையில் நெடுந்தீவுக்கு தான் சென்றிருந்தபோது, ​​வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டதாக கூறினார்.

மேலும், அப்பகுதிக்குத் தடையற்ற மின்சாரத்திற்கு அரசாங்கம் எப்போது உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.