2வது டெஸ்ட்டில் இலங்கை வலுவான நிலையில்!

2வது டெஸ்ட்டில் இலங்கை வலுவான நிலையில்!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (5) இடம்பெறவுள்ளது. 

போட்டியில் தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாளில் 9 விக்கெட்டுக்களை இழந்து 549 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. 

குசல் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும், சோனல் தினுஷ 92 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். 

இதனை அடுத்து தமது முதலாம் இனிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இன்றும் ​மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாம் இனிங்ஸை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.