
யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு நேர்ந்த துயரம் ; பிரேத பரிசோதனை கொடுத்த அதிர்ச்சி
யாழில் நடை பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தாலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடை பயிற்சிக்கு சென்றவேளை காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பற்றைக்குள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இடம் தெரியாமல் அந்த பகுதிக்கு சென்றவேளை குருதியமுக்கம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.