யாழில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் 2ஆவது இடத்தைப் பெற்ற மாணவி

யாழில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் 2ஆவது இடத்தைப் பெற்ற மாணவி

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன் என்ற மாணவியே இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

யாழில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் 2ஆவது இடத்தைப் பெற்ற மாணவி | Student Secured 2Nd Place Jaffna Scholarship Exam

அண்மையில் வெளியாகிய தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 187 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தையும் யாழ்.மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு சிறந்த பெறுபேற்றை பெற்று சாதனை புரிந்து பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவியை பலரும் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.