
முல்லைத்தீவு கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.