நடைமுறைக்கு வருகிறது சிறப்பு குழந்தைகள் உதவித்தொகை!

நடைமுறைக்கு வருகிறது சிறப்பு குழந்தைகள் உதவித்தொகை!

நிறுவன பராமரிப்பு அல்லது பாதுகாப்பின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகளுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்குவது தொடர்பான செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த செயற்திட்டம், நாளை (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட்வுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வாழ்க்கை உதவித்தொகைக்கு 9,191 குழந்தைகள் தகுதியுடையவர்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய  சரோஜா சாவித்ரி,

நடைமுறைக்கு வருகிறது சிறப்பு குழந்தைகள் உதவித்தொகை! | Government S Special Child Allowance

"நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகள், நிறுவனமயமாக்கப்பட்ட குழந்தைகள், அந்த நிறுவனங்களின் பராமரிப்பிலும் பாதுகாவலிலும் உள்ள குழந்தைகள், அதே போல் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகளாக நாங்கள் அடையாளம் காணும் குழந்தைகள் ஆகியோருக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்காக ரூபாய் 5,000 வழங்கப்படவுள்ளது

வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டபடி, அந்த திட்டத்ழத "அர்த்த" என்று பெயரிட்டுள்ளோம்.

நடைமுறைக்கு வருகிறது சிறப்பு குழந்தைகள் உதவித்தொகை! | Government S Special Child Allowance

வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகளுக்கும், நிறுவனப் பராமரிப்பில் அல்லது பாதுகாப்பில் உள்ளவர்களுக்கும் இந்த மாதாந்திர உதவித்தொகை 5,000 ரூபாய் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொகையில் ரூபாய் 3000 பராமரிப்பு நிறுவனங்களுக்கும், 2000 ரூபாய் உதவியை பெறும் சிரார்களின் வங்கி கணக்குக்கும் அனுப்பப்படும்.

மேலும், அவர்களுக்கு 18 வயது ஆன பிறகு, இந்த உதவி வங்கி இருப்பு எதிர்காலத்தில் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். என்றார்.