ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பேருந்துகள் ; நால்வர் படுகாயம்

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பேருந்துகள் ; நால்வர் படுகாயம்

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பேருந்துகள் ; நால்வர் படுகாயம் | Bus Involved In A Horrific Accident

விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது விபத்துக்குள்ளான பேருந்து பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.