தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் குடும்பம்

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் குடும்பம்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகத்தில் தவிக்கும் குடும்பம் | Young Man S Death Leaves Tamil Family In Grief

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும் பின் இருக்கையில் பணித்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.​

சம்பவத்தில் 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.