CIDயால் திடீரென கைது செய்யப்பட்ட இளம் பெண் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

CIDயால் திடீரென கைது செய்யப்பட்ட இளம் பெண் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

முகத்துவாரம் - இப்பாவத்த சந்தி பகுதியில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

CIDயால் திடீரென கைது செய்யப்பட்ட இளம் பெண் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி | Young Woman Suddenly Arrested By Cid

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு 13, நிவ்வெம் சதுக்கப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டை சோதனையிட்டனர்.

இதன்போது, 745 கிராம் ஐஸ் போதைப்பொருள், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அதற்கான 5 ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.