
யாழில் காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு ; மாதிரிகள் கொழும்புக்கு
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த்த கொழும்பில் உயர் கல்வி பயின்று வருபவர் என்றும், சமீபத்தில் யாழில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியதும் நோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
புதன்கிழமை (7) உடல்நிலை மோசமான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு காரணமான நோய் இருப்பதை உறுதிப்படுத்த மருத்துவ நிபுணர்கள் அவரது உடற்கூறு மாதிரிகளை மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளனர்.