நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி

கேகாலையில் மாவனெல்லை - ஹெம்மாத்தகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று  (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி | Motorcycle Hits Dog Young Man Dies

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் மீது மோதி கவிழ்ந்து பெண் பாதசாரி மீது மோதி பின்னர் அருகிலிருந்த கொங்கிரீட் கல்லில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் வீதியில் பயணித்த பெண்ணும் காயமடைந்துள்ள நிலையில் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.