கவனயீனம் காரணமாக பறிபோன சிறுவனின் உயிர்!
கள்ளிக்குளம் பகுதியில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுவன் நேற்று காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026