வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து
கேகாலை, ரம்புக்கனை நகரத்திற்கு அருகில் பேருந்து ஒன்று மோட்டார்சைக்கிளை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்தைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026