யாழில் பெரும் சோக சம்பவம்... சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பெரும் சோக சம்பவம்... சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாண பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (16-08-2024) உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோக சம்பவம்... சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு! | Girl Riding Bike With Brother Fell Down Die Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

பின்னர் தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது மாதகல் - பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

யாழில் பெரும் சோக சம்பவம்... சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு! | Girl Riding Bike With Brother Fell Down Die Jaffna

இந்த நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

யாழில் பெரும் சோக சம்பவம்... சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு! | Girl Riding Bike With Brother Fell Down Die Jaffna

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை யாழ்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.