வங்கிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நிலவரம்..!

வங்கிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நிலவரம்..!

நேற்றைய தினத்துடன் (12) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (13) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.72  ரூபாயிலிருந்து 315.45 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 328.85  ரூபாயிலிருந்து 329.62 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.73 ரூபாயிலிருந்து 315.72 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 326 ரூபாயிலிருந்து 327 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது

வங்கிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : இன்றைய நிலவரம் | Dollar Rate Banks Today Exchange Rate 

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 317 ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து  328 ரூபாய் ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.