வைகைப்புயலையும் விட்டு வைக்காத கொரோனா!

வைகைப்புயலையும் விட்டு வைக்காத கொரோனா!

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது.

வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகர் ரிடர்ன்ஸ்´ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.